உழவர் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை


உழவர் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை
x
தினத்தந்தி 9 Aug 2023 12:15 AM IST (Updated: 9 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை இடுபொருள் தயாரிக்கும் உழவர் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

இயற்கை இடுபொருள் தயாரிக்கும் உழவர் குழுக்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இயற்கை விவசாயம்

திருவாரூர் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலபடுத்தி ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அங்கக இடுபொருட்களை உழவர்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்திட மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இயற்கை விவசாயம் செய்திடும் அல்லது இயற்கை விவசாயம் செய்திட ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

உழவர் சந்தையில் விற்பனை

இந்த தொகையை இயற்கை இடுபொருட்கள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங்க், லேபிலிங் மற்றும் மூலப்பொருட்கள் வாங்கிட பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய தேவையான அனுமதி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவன் செயலியின் கீழ் பதிவு செய்திட கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story