மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் மாயம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் மாயமானது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 61). விவசாயி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு வங்கியில் விவசாய கடன் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்திருந்தார். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மார்க்கெட் பகுதியில் நிறுத்தி விட்டு கடைக்கு சென்றார்.
இதையடுத்து அவர் குன்னூருக்கு வந்து பார்த்த போது பெட்டியில் இருந்த பணம், வங்கி பாஸ்புக் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story