ரூ.1¼ லட்சம் புகையிலை பறிமுதல்


ரூ.1¼ லட்சம் புகையிலை பறிமுதல்
x

ரூ.1¼ லட்சம் புகையிலை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் தனிப்படையினர் சிவகாசி நகர் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்த விளாத்திக்குளத்தை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் பெயரில் சிவகாசி வடக்கு விதியை சேர்ந்த அருண் (45) என்பவரையும் போலீசார் கைது செய்து சரக்கு வாகனத்தையும் அதில் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story