நடைபயிற்சியில் ஈடுபட்டவரிடம் 1¼ பவுன் சங்கிலி பறிப்பு;மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது
நடைபயிற்சியில் ஈடுபட்டவரிடம் 1¼ பவுன் சங்கிலி பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது.
திங்கள்சந்தை,
நாகர்கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து 1¼ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 பேர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சங்கிலி பறிப்பு
நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 57). இவர் வெளிநாட்டில்வேலை செய்து வருகிறார். இவர் ஊருக்கு வந்திருந்தார். அவர் நேற்று காலை ஆளூர் ெரயில் நிலையம் அருகே பிராந்தநேரி பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் மோகன்தாசிடம் ஒரு காகிதத்தை கொடுத்து முகவரி கேட்பது போல் நடித்து அவர் கழுத்தில் அணிந்து இருந்த 1¼ பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
போலீஸ் தேடுகிறது
இதுபற்றி மோகன்தாஸ் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப் பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற 3 பேர்களையும் தேடி வருகிறார்.