கொட்டகை மீது மரம் விழுந்ததில் 10 ஆடுகள் பலி


கொட்டகை மீது மரம் விழுந்ததில் 10 ஆடுகள் பலி
x

செய்யாறு அருகே கொட்டகை மீது மரம் விழுந்ததில் 10 ஆடுகள் பலியானது.

திருவண்ணாமலை

தூசி

செய்யாறு அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது வீட்டின் பின்புறம் ஆட்டு கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் பலத்த மழை காரணமாக அங்கிருந்த புளியமரம் விழுந்தது. இதில் சுவர் இடிந்து ஆட்டு கொட்டகையில் இருந்த 10 ஆடுகள் இறந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் வந்து பார்வையிட்டனர். மேலும் ஆடுகள் உயிரிழப்பு குறித்து கால்நடைத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டடு மருத்துவர் உடற்கூறு ஆய்வு செய்து அறிக்கையாக தெரிவிக்கப்படும் என கூறினர்.

மேலும் உயிரிழந்த ஆடுகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று ராமமூர்த்தி கோரிக்கை விடுத்தார்.


Next Story