பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம்


பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம்
x

பஸ் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக் கொண்டு தனியார் பஸ் ஒன்று மானாமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் திருச்சுழி அருகே தமிழ்பாடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரிக்கு வழிவிடுவதற்காக முயன்ற போது சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் தமிழ்பாடியை சேர்ந்த முருகேஸ்வரி, வீரசோழனை சேர்ந்த அபுதாபி பீவி, வராகித் பேகம், கார்த்திக்ராஜா, விருதுநகரை சேர்ந்த பாண்டியம்மாள், ஆத்திபட்டியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story