10 கிலோ கஞ்சா பறிமுதல்
காட்பாடியில் போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காட்பாடி
காட்பாடியில் போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க வேலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான போலீசார் சித்தூர் பஸ் நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு 10 கிலோ கஞ்சா கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து சதீஷை கைது செய்தனர்.