விபத்தில் 10 பேர் பலி: 2 பேருக்கு தலா 3½ ஆண்டு ஜெயில்-சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு


விபத்தில் 10 பேர் பலி: 2 பேருக்கு தலா 3½ ஆண்டு ஜெயில்-சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு
x

விபத்தில் 10 பேர் பலியானது தொடர்பான வழக்கில் 2 பேருக்கு தலா 3½ ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சங்ககிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சேலம்

சங்ககிரி:

10 பேர் பலி

பெங்களூரு கஜேந்திரன் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் காந்தராஜ் (வயது 58). இவர், கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் 7-ந் தேதி மாலை 3.30 மணி அளவில் தன்னுடைய காரில் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி சென்றார்.

அக்கமாபேட்டை என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற டவுன் பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சங்ககிரி நோக்கி வந்த பஸ்சும், காந்தராஜ் சென்ற காரும் மோதிக்கொண்டன.

தலா 3½ ஆண்டு ஜெயில்

அப்போது கார், டவுன் பஸ், எதிரே வந்த பஸ் ஆகியவற்றில் இருந்த 10 பேர் பலியானார்கள். மேலும் 44 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு-1ல் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, கார் டிரைவர் காந்தராஜ், அரசு பஸ் டிரைவர் ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா ரூ.12 ஆயிரம் அபராதமும், தலா 3 ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Next Story