சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி; 3 பேர் மீது வழக்கு


சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி; 3 பேர் மீது வழக்கு
x

சீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மன்னார்புரம் நியூகாலனியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 48). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு சீட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடியே 50 லட்சம் தொகைக்கான சீட்டில் சேர்ந்தார். இவர் கண்டோன்மெண்ட்டில் உள்ள வங்கி கிளை மூலமாக மாதந்தோறும் சீட்டுத்தொகையை செலுத்தி வந்தார். அப்போது அவரை அணுகிய 3 பேர் செந்தில்வேலிடம் மேற்படி சீட்டு நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.1 லட்சம் வட்டியாக கிடைக்கும் என்று கூறினர். இதை நம்பிய அவர், ரூ.10 லட்சத்தை 3 காசோலைகள் மூலமாக கொடுத்தார். இதையடுத்து செந்தில்வேலுக்கு விபத்து ஏற்பட்டதால் அவரால் சீட்டுத்தொகையை செலுத்த முடியவில்லை. இதனால் தான் முதலீடு செய்த ரூ.10 லட்சத்தை திரும்ப தருமாறு கேட்டார். அதற்கு 3 பேரும் பணத்தை தர மறுத்ததோடு, அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில்வேல் அளித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் சண்முகம், மணி, சன்னாசி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story