நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 10 மாதம் சிறை
நன்னடத்தை பிணையை மீறியவருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை பேட்டை கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுடலைமணி என்ற சுடலை (வயது 23). இவரிடமிருந்து ஒரு வருடத்திற்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. அதன் பின்பும் இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதாக பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் (மேற்கு) சரவணகுமார் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். அதன் மீது விசாரணை நடத்திய அவர் நன்னடத்தை பிணையை மீறி குற்றம் புரிந்ததற்காக 10 மாதம் 11 நாட்கள் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story