நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை


நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். படகை விடுவிக்காததால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

நாகப்பட்டினம்


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். படகை விடுவிக்காததால் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

சிறை பிடிப்பு

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது44) மீனவர். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 3-ந் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வகுமார், ராஜா, பொண்ணுராஜா, இளையராஜா, கணபதி, சாய் சிவா, முகேஷ், அரவிந்த், அழகு, வேலு ஆகிய 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது நாகை மீனவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி, சிறை பிடித்தனர்.

10 பேர் விடுதலை

பின்னர் மீனவர்களை கைது செய்ததோடு, அவர்கள் வந்த விசைப்படகையும் பறிமுதல் செய்து திருகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களை 21-ந் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிறை பிடிக்கப்பட்ட 10 மீனவர்களையும் விடுதலை செய்து திருகோணமலை கோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனால் படகை மட்டும் விடுவிக்கவில்லை. இதனால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story