எருது விடும் விழாவில் மாடு முட்டி 10 பேர் காயம்


எருது விடும் விழாவில் மாடு முட்டி 10 பேர் காயம்
x
திருப்பத்தூர்

பெருமாப்பட்டு கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டி 10 பேர் காயம் அடைந்தனர்.

எருது விடும் விழா

திருப்பத்தூர் அருகே பெருமாப்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன. அவற்றை கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் 2 காளைகள் பங்கேற்க தடை விதித்தனர். மற்ற காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து ஊர் கவுண்டர் எம்.சி. சின்னதுரைகவுண்டர், ஊர் நாட்டாண்மை சி.முருககவுண்டர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா தேவராஜ் முன்னிலையில் விழா தொடங்கியது.

இதனையடுத்து காைளகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின.

10 பேர் காயம்

அப்போது இருபுறமும் நின்று இருந்தவர்கள் பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த அவற்றின் மீது கைகளை வைத்து தட்டினார்கள். அப்போது எதிரே இருந்தவர்கள் மீது காளைகள் முட்டியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவனக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். இதில் குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு ரூ 1 லட்சத்து11 ஆயிரம் முதல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறப்பிடம் பெற்ற காளைகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் எம்..ஆர்.அரவிந்தன், மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீஸ் துணை சூப்பிரண்டு கணேஷ், தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story