சாலையோரம் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்


சாலையோரம் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே சாலையோரம் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அருகே சாலையோரம் பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

பஸ் கவிழ்ந்தது

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த காரப்பிள்ளு கிராமத்தில் இருந்து தொரையட்டி கிராமத்திற்கு நேற்று காலை ஒரு மினி பஸ் சென்று கொண்டு இருந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 30 பேர் பயணம் செய்து கொண்டு இருந்தனர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் தொரையட்டி கிராமத்தில் துக்க வீட்டுக்கு செல்ல இருந்தனர்.

காவியலோரை பகுதியில் சென்றபோது எதிரே ஆட்டோ வந்தது. குறுகலான சாலை என்பதால் பஸ்சை சாலையோரம் நிறுத்துவதற்காக டிரைவர் பிரேக் போட்டார். ஆனால் பிரேக் பிடிக்கவில்லை என தெரிகிறது. தொடர்ந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் இறங்கி, அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது.

50 அடி பள்ளத்தில்...

இந்த விபத்தில் சிக்கியவர்கள் ஐயோ... அம்மா... என்று கூச்சல் போட்டனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் (கூடுதல் பொறுப்பு) கண்மணி தலைமையிலான போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் பாஞ்சலி (வயது 46), விமலா (36), கண்ணம்மா (60), டிரைவர் நரேன் (32) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் குறித்து தேனாடுகம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக மரம் மற்றும் பாறை மீது மோதியதால் பஸ் அங்கேயே நின்று விட்டது. இல்லையென்றால் 50 அடி பள்ளத்திற்குள் கவிழ்ந்திருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story