வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்


வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
x

வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர்


மதுரையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன். இவரும் மற்றொரு நபரும் காரில் கோவில்பட்டி சென்று கொண்டிருந்தனர். இந்த கார் விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் மருளூத்து அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென பாலத்தில் மோதியது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் படுகாயம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து பின்னால் மதுரை மாநாட்டிற்கு சென்று விட்டு வெம்பக்கோட்டை யூனியன் புல்லக்கவுண்டன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் காளியப்பன் ஏற்பாடு செய்த வேன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த வேன் பாலத்தில் மோதி காரில் மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த புல்லகவுண்டன்பட்டியை சேர்ந்த துளசி அம்மாள், ராஜம்மாள், சுப்புலட்சுமி, சாரதா, கவிதா, ஜெயமணி, சீனிவாசகம், தாயம்மாள், துரைராஜ், பொம்மையாபுரத்தை சேர்ந்த சிபி யோன்ராஜ் ஆகிய 10 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூலக்கரை போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த துளசி அம்மாளை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 9 பேரையும் விருதுநகர்அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மதுரை தனியார் ஆஸ்பத்தியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story