புகையிலை பொருட்கள் விற்ற 10 கடை உரிைமயாளர்களுக்கு அபராதம்


புகையிலை பொருட்கள் விற்ற 10 கடை உரிைமயாளர்களுக்கு அபராதம்
x

கயத்தாறு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 10 கடை உரிைமயாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு தாலுகா பகுதியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு அலுவலர் வேணுகா தலைமையில், மளிகை கடைகள், பெட்டிகடைகள், ஓட்டல்கள், பேக்கரிகளில் சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். அதில் கயத்தாறு கடம்பூர் சாலையிலுள்ள 10 கடைகள், மளிகை கடைகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடைகளில் இருந்து 3½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளில் உரிமையாளர்களுக்கு மொத்தமாக ரூ.1,850 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் கயத்தாறு வட்டார மருத்துவ அலுவலர் கணேசன், சுகாதார ஆய்வாளர்கள் விஜயகுமார், பெரியசாமி, பாபு, பெருமாள், கயத்தாறு பேரூராட்சி நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் சுகாதார அலுவலர்கள் ஈடுபட்டனர்.


Next Story