சேவை குறைபாடு:செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு


சேவை குறைபாடு:செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2023 10:53 PM IST (Updated: 6 Jun 2023 7:32 AM IST)
t-max-icont-min-icon

சேவை குறைபாட்டுக்காக செல்போன் கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கல்குளம் பகுதியை சேர்ந்தவர் ஷீபா. இவர் நாகர்கோவிலில் உள்ள செல்ேபான் கடையில் ரூ.17,196 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய அன்றே செல்போன் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சென்று சரி செய்ய கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து பழுது நீக்கப்பட்டுள்ள செல்போனை வாங்கிச் செல்லுங்கள் என கடைக்காரர் கூறியுள்ளார். ஆனால் அந்த செல்போனில் சேவை குறைபாடு இருப்பதாகவும், வேறு புதிய செல்போன் வேண்டுமென அவர் வற்புறுத்தி கேட்டுள்ளார். ஆனால் புதிய செல்போன் கொடுக்க வாய்ப்பில்லை என கடைக்காரர் தெரிவித்துள்ளார். இதனால் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான ஷீபா கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர், சங்கர் ஆகியோர் செல்ேபான் கடையின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஷீபாவுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் ஏற்கனவே செலுத்தப்பட்ட ரூ.17 ஆயிரத்து 196 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story