காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

மருத்துவ செலவுக்கு பணம் வழங்காத காப்பீடு நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சுதா தேவி. இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் காப்பீடு நிறுவனத்தில் ரூ.8,673 செலுத்தி மருத்துவ காப்பீடு எடுத்திருந்தார். அதன் பின்னர் அவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு 2 ஆஸ்பத்திரிகளில் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 232 செலுத்தி சிகிச்சை பெற்று குணமடைந்தார். தொடர்ந்து அவர் தனது மருத்துவ செலவுக்கான தொகையை காப்பீடு நிறுவனம் தர வேண்டும் என விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. எனவே வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான சுதா தேவி, குமரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ் மற்றும் உறுப்பினர் சங்கர் ஆகியோர் காப்பீடு நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு மருத்துவ செலவு தொகை ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 232, அபராத தொகை ரூ.10 ஆயிரம், வழக்கு செலவு ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

-----


Next Story