10 ஆயிரம் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்


10 ஆயிரம் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்
x

10 ஆயிரம் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று கிராம கோவில் பூசாரி பேரவை நிறுவனர் வேதாந்தம் கூறினார்.

திண்டுக்கல்

கிராம கோவில் பூசாரிகள் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை சார்பில் மாவட்ட மாநாடு திண்டுக்கல் தனியார் மகாலில் நடந்தது. இதற்கு கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், விசுவ இந்து பரிஷத் மாநில செயல் தலைவர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில், அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத்தொகை வழங்க வேண்டும். நலவாரியத்தை சீரமைக்க வேண்டும். கிராம கோவில்களுக்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அருள்வாக்கு அருள்வோர் பேரவை மாவட்ட அமைப்பாளர் சாமி, கிராம கோவில் பூசாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி, இணை அமைப்பாளர் சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து கிராம கோவில் பூசாரிகள் பேரவை நிறுவனர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

கிராம கோவில் பூசாரிகள் பேரவையில் 1 லட்சத்துக்கும் மேல் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால் இதில் பட்டதாரிகள் எண்ணிக்கை குறைவு. கிராம கோவில் பூசாரிகள் 4 ஆயிரம் பேருக்கு ரூ.2 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்காவது ஓய்வூதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகளுக்கான ஆண்டு வருமானத்தை ரூ.72 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும். அப்போது தான் அனைத்து தரப்பு பூசாரிகளும் பலன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story