என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை


என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த என்ஜினீயர் உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர் புல்லட் என்ற பால்பாண்டி (வயது 21). அதே பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன் (20). என்ஜினீயர். இவர்கள் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.



Related Tags :
Next Story