தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

4 பேரை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ராஜபாளையம் அருகே உள்ள கணபதி சுந்தர நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் மீனாட்சி அம்மாள் (வயது 70). இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் மதியழகன். கூலி தொழிலாளி. இந்தநிலையில் மதியழகன் மனைவிக்கும், மீனாட்சி அம்மாளுக்கும் கழிவுநீர் செல்வது தொடர்பாக தகராறு ஏற்படுவது வழக்கம். இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சினை குறித்து மதியழகனிடம் அவரது மனைவி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதியழகன் அரிவாளால் மீனாட்சி அம்மாளின் உறவினர்களான 3 பெண்கள், ஒரு ஆண் ஆகிய 4 பேரை அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் விசாரித்து 4 பேரை அரிவாளால் வெட்டிய மதியழகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.


Related Tags :
Next Story