திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ரூ.100 கோடியில் மின் திட்டங்கள்
திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ரூ.100 கோடியில் மின் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
திருப்பத்தூர் மாவட்ட மின் பகிர்மான வட்டம் சார்பில் ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் என்ற திட்டம் மூலம் பிரதமர் மோடி பயனாளிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ரூ.49 கோடி செலவில் முடிக்கப்பட்ட மற்றும் ரூ.52 கோடி செலவில் புதிய மின் திட்டங்களை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை வகித்தார். திருப்பத்தூர் வட்ட கூடுதல் தலைமை பொறியாளர் எம். பன்னீர்செல்வம் முன்னிலை வதித்தார். செயற்பொறியாளர்
ஜி.அருள்பாண்டியன் வரவேற்றார். பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்து பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
அதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் மரியஅந்தோணிராஜ், உள்பட பலர் பேசினார்கள். மின் சிக்கனத்தை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள் ஜெய்னுலாவுதின், மோகனசுந்தரம், உதவி செயற்பொறியாளர்கள் ஏஞ்சல்ஸ் சிவசங்கரி, பிரபு கண்ணன் சந்தானம், தனலட்சுமி, பொறியாளர்கள் முஸ்தபா, சோமு, வருவாய் மேற்பார்வையாளர் விஜயகுமார், போர்மேன் சி.ரங்கநாதன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.