100 நாள் வேலை திட்ட பணிகளை மாணிக்கம்தாகூர் எம்.பி. ஆய்வு


100 நாள் வேலை திட்ட பணிகளை மாணிக்கம்தாகூர் எம்.பி. ஆய்வு
x

டி.கல்லுப்பட்டி யூனியனில் 100 நாள் வேலை திட்ட பணிகளை மாணிக்கம்தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.

மதுரை

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள எஸ்.கீழப்பட்டி, சந்தையூர், எஸ்.மேலப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் 100 நாள் வேலைத்திட்டத்தை விருதுநகர் ெதாகுதி எம்.பி.மாணிக்கம் தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 100 நாள் வேலை நடைபெறும் இடங்களில் உள்ள பெண்களிடம், கடந்த ஆண்டு 100 நாள் வேலைத்திட்டத்தில் எத்தனை நாட்கள் வேலை செய்தீர்கள்? தற்போது எத்தனை நபர்கள் வேலை செய்து வருகிறார்கள்? எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்? என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் சந்தையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். சிகிச்சைக்காக வந்திருந்த கர்ப்பிணிகள் மற்றும் பொதுமக்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சுகாதார மையத்தில் இருந்த ஊழியர்கள் வருகை பதிவேடு, நோயாளிகள் வருகை பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசங்கர நாராயணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் அம்மாபட்டி பாண்டியன், வட்டார தலைவர் கணேசன், காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப்பினர் காமாட்சி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story