திருவண்ணாமலை அருகே 100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்


திருவண்ணாமலை அருகே 100 நாள் பணியாளர்கள் சாலை மறியல்
x

திருவண்ணாமலை அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் ஓரந்தவாடி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் மற்றும் வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் திருவண்ணாமலை-காஞ்சி சாலை ஆலத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பாளையம் ஒன்றிய அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் மற்றும் வேலை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒன்றிய அலுவலர்கள் தெரிவித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story