வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை


வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை
x

வத்தலக்குண்டுவில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட கோம்பைபட்டியை சேர்ந்த 25 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் திடீரென்று அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது தேசிய ஊரக வேலை திட்டத்தில், 100 நாள் வேலை வழங்க வேண்டும். ஆனால் கோம்பைபட்டி ஊராட்சியில் 20 நாட்கள் முதல் 25 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையாளர் உதயகுமார், போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் பணி நாட்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டதாகவும், இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story