கல்குவாரியில் 100 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
கல்குவாரியில் 100 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 50). இவர் மருவத்தூர் அருகே உள்ள கல்பாடி கிராமத்தில் அரசு அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இந்நிலையில் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி நேற்று அந்த கல்குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கல் குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்க்க பயன்படுத்தக்கூடிய 100 டெட்டனேட்டர்களை பாதுகாப்பற்ற முறையில் திறந்த வெளியில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட கோட்டாட்சியர் நிறைமதி, பாதுகாப்பின்றி திறந்த வெளியில் வைத்திருந்த டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து, உரிய கிடங்கில் வைத்து பாதுகாக்குமாறு உத்தரவிட்டார். மேலும் அதற்குரிய ஆவணங்களை சரி பார்த்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story