செங்கல்பட்டு அருகே அதிமுகவின் 100 அடி கொடி கம்பம் விழுந்து தொண்டர் பலி...!


செங்கல்பட்டு அருகே அதிமுகவின் 100 அடி கொடி கம்பம் விழுந்து தொண்டர் பலி...!
x

செங்கல்பட்டு அருகே அதிமுகவின் 100 அடி கொடி கம்பம் விழுந்து கட்சி தொண்டர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அதிமுகவின் 100 அடி உயர கொடி கம்பத்தை அமைக்கப்பட்டிருந்தது. இதனை ராட்சத கிரேன் மூலம் கழட்டி மாட்டும் பணி இன்று நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென கம்பம் சாய்ந்தது விழுந்தது.

இதில் அதிமுக தொண்டர் செல்லப்பன் என்பவர் சிக்கிக் கொண்டார். கம்பவம் விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குவந்த போலீசார் உயிரிழந்த செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சாலையில விழுந்து கிடந்த கொடி கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story