வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் 100 அடி உயர தி.மு.க. கொடி கம்பம்
வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் 100 அடி உயர தி.மு.க. கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி
வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் 100 அடி உயர தி.மு.க. கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 17-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வருகிறார். அப்போது வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடி ஏற்றுகிறார். இதற்காக வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் கிரேன் மூலம் நிறுவப்பட்டது. அந்த பணிகளை நகர தி.மு.க. செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. மற்றும் ஆம்பூர் தொகுதி வில்வநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.
நகர தி.மு.க. துணை செயலாளர் தென்னரசு மற்றும் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story