ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 100 கிலோ கஞ்சா பறிமுதல் - கேரளாவை சேர்ந்த 3 பேர் கைது
நாகமலைபுதுக்கோட்டை வழியாக ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகமலைபுதுக்கோட்டை,
நாகமலைபுதுக்கோட்டை வழியாக ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
மதுரை நாகமலைபுதுக்கோட்டை நான்குவழிச்சாலை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் நேற்று துவரிமான் சந்திப்பை அடுத்து கண்மாய் கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது காரில் வந்தவர்கள் கேரள மாநிலம் பாலக்காடு ஜெயினி மேடு பகுதியைச் சேர்ந்த காசிம் மகன் மன்சூர்அலி (எ) குஞ்சு (வயது 32), கொல்லம் பெரிநாடு புனர்திவாசா காலனியைச் சேர்ந்த நவ்சத் மகன் முத்தாலிப் (28), கொல்லம், பனையம் தெகவெளத்தாடியைச் சேர்ந்த சபுதீன் மகன் நாசர் (25) என்பதும் தெரிய வந்தது.
100 கிலோ கஞ்சா பறிமுதல்
அவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மன்சூர்அலி உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 100 கிலோ கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.