காரில் கடத்திய 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
வள்ளியூரில் காரில் கடத்திய 100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வள்ளியூர்:
வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த கேரளா பதிவு எண் கொண்ட காரை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது காருக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டையில் இருப்பதைக் கண்டு காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த ஹரிகரசுதன் (வயது 26), நெல்லை மாவட்டம் மூைலக்கரைபட்டி அருகே உள்ள தென்னவனேரியை சேர்ந்த லிங்கபெருமாள் (27) என்பது தெரியவந்தது. இவர்கள் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு விற்பனைக்காக கொண்டு செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ஹரிகரசுதன், லிங்கபெருமாள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 100 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.