100 லிட்டர் பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


100 லிட்டர் பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

100 லிட்டர் பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

துறையூர்:

துறையூர் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலை உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் குமார் தலைமை தாங்கினார்.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமை பாலுக்கு 50 ரூபாயும் அறிவிக்க வேண்டும். மாட்டுத்தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாட்டுக்கடனை வட்டி இல்லாமல் வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் ஆவின் பால் சேர்த்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது கேனில் கொண்டு வந்த சுமார் 100 லிட்டர் பாலை சாலையில் கொட்டி, கோஷங்களை எழுப்பினர்.


Next Story