விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய விலையில் மூலிகை செடிகள்


விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய விலையில் மூலிகை செடிகள்
x

திருமருகலில் விவசாயிகளுக்கு 100 சதவீத மானிய விலையில் மூலிகை செடிகள் வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகலில் தோட்டக்கலை துறை மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், பெரும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு 18 கருப்பு நிற தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 28 விவசாயிகளுக்கு முழு மானியத்தில் தண்ணீர் குழாய்களை தோட்டக்கலை அலுவலர் ஆர்த்தி, உதவி அலுவலர் செல்லபாண்டியன் ஆகியோர் வழங்கினர்.மேலும் ஒன்றியத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தகுதிக்கு ஏற்ப வாழை, கோவைக்காய் செடி, முள் இல்லா மூங்கில், மூலிகை செடிகள், பூச்செடிகள் உள்ளிட்டவைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டது.அப்போது இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் குறைவான அளவில் தண்ணீர் பயன்பாடு, மகசூல் அதிகரிப்பு, களைகள் வளர்வது குறைக்கப்படும் மற்றும் மின்சாரம் குறைவான அளவில் பயன்படும் என தோட்டக்கலை உதவி அலுவலர் தெரிவித்தார். மேலும் தண்ணீர் குழாய்கள் தேவைப்படும் சிறு,குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் தண்ணீர் குழாய்கள் பெற தோட்டக்கலை அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என கூறினார்.


Next Story