பாதுகாப்பு பணிக்கு வேலூரில் இருந்து 100 போலீசார் பயணம்
கர்நாடகா சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வேலூரில் இருந்து 100 போலீசார் சென்றனர்.
வேலூர்
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் 10-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக வேலூர் சரகத்தில் இருந்து 100 போலீசார் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டனர்.
முன்னதாக வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து உயர் அதிகாரிகள் எடுத்துக் கூறினர்.
அங்கிருந்து கர்நாடக மாநில அரசு பஸ்களில் போலீசாருடன் ஊர்க்காவல்படையை சேர்ந்த 30 பேரும் தேர்தல் பணிக்காக புறப்பட்டு சென்றனர். இதில் ஒரு பஸ் திடீரென பழுது ஏற்பட்டது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு சென்றனர். அவர்கள் 3 நாட்கள் தேர்தல் பணி மேற்கொள்ள உள்ளனர்.
Related Tags :
Next Story