சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள்- தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தகவல்


சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள்- தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 1 Jun 2023 3:32 AM IST (Updated: 2 Jun 2023 4:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் வட்டார சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.பிரபா தெரிவித்துள்ளார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் வட்டார சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.பிரபா தெரிவித்துள்ளார்.

நுண்ணீர் பாசனத்திற்கு மானியம்

தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.பிரபா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நுண்ணீர் பாசனம் பெற்று பயன் அடைவதற்காக பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திருப்பரங்குன்றம் திட்டத்தில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், சொட்டுநீர், தெளிப்புநீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட உள்ளது. குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டர் வரையிலும், சிறு விவசாயிகளுக்கு 2 எக்டர் வரையிலும், இதர விவசாயிகளுக்கு 5 எக்டர் வரையிலுமாக வழங்கப்படுகிறது.

பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை

சிறுகுறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குத்தகைய நிலமாக இருப்பின் ஏழு ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். விவசாயிகள் அரசு அங்கீகரித்தவைகளில் தாங்கள் விரும்பும் நீர் வனங்களின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்து கொள்ளலாம். நுண்ணீர் பாசன அமைப்புக்கு பயிரின் இடைவெளிக்கு தகுந்தாவாறு மானியங்கள் வழங்கப்படுகிறது.

ஆகவே பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் தோட்டக்கலை பயிர்களை அடங்கலில் பதிவு செய்தவுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நிலவரைப்படம், சிறுகுறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இணையதள சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயனடையுமாறு விவசாயிகளை கேட்டு கொள்ளப்படுகிறார்கள். திருப்பரங்குன்றம் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆறுமுகம், ஜெயபாலன், அர்ஜுன் ஆகியோரை நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story