அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த பெண் போலீசாரின் 1,000 கி.மீ. பாய்மர படகு பயணம் நிறைவு


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த பெண் போலீசாரின் 1,000 கி.மீ. பாய்மர படகு பயணம் நிறைவு
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த பெண் போலீசாரின் 1,000 கி.மீ. பாய்மர படகு பயணம் நிறைவு விழாவில் தமிழக போலீஸ் டி.ஜி.பி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

சென்னை

தமிழக போலீஸ் துறையில் பெண் போலீசாரின் பொன் விழா ஆண்டையொட்டி 30 பெண் போலீசார் சென்னை துறைமுகத்தில் இருந்து 3 பாய்மர படகு மூலம் பழவேற்காடு வழியாக கோடியக்கரைக்கு பயணிக்கும் நிகழ்ச்சியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 10-ந்தேதி தொடங்கி வைத்தார்.1,000 கி.மீ. தொலைவிலான இந்த கடல் பயணத்தை முடித்துக்கொண்டு பாய்மர படகு மூலம் பெண் போலீசார் நேற்று சென்னை திரும்பினார்கள். இந்த பயணத்தின் நிறைவு விழா சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. விழாவில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பாய்மர படகு பயணத்தில் பங்கேற்ற பெண் போலீசாருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மித்தல், கூடுதல் டி.ஜி.பி. (நிர்வாகம்) பாலநாகதேவி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஐ.ஜி. பவானீஸ்வரி, கடலோர பாதுகாப்பு குழுமத்தின் போலீஸ் சூப்பிரண்டுகள் கயல்விழி, நிஷா, சுந்தர வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story