1,000 வி.வி.பேட் எந்திரங்கள் புதுக்கோட்டை வந்தன


1,000 வி.வி.பேட் எந்திரங்கள் புதுக்கோட்டை வந்தன
x

1,000 வி.வி.பேட் எந்திரங்கள் புதுக்கோட்டை வந்தன.

புதுக்கோட்டை

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்களிக்கும் போது யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதி செய்யும் வகையில் வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெல் நிறுவனத்தில் இருந்து 1,000 வி.வி.பேட் எந்திரங்கள் புதுக்கோட்டைக்கு வந்தன. இதனை கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன. வி.வி.பேட் எந்திரங்கள் முழுவதும் வைக்கப்பட்ட பின்பு அந்த அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா உள்பட அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story