1,000 பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை
1,000 பெண்கள் பங்கேற்கும் குத்துவிளக்கு பூஜை இன்று நடக்கிறது.
புதுக்கோட்டை
கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், சிவபெருமான், தெட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமை குத்து விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான குத்து விளக்கு பூஜை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கி 2 கட்டங்களாக மாலை வரை நடக்கிறது. இதில் 1000 பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்கிற்கு பூஜை செய்கின்றனர். இதே போல் ஆடி மாதம் 4 வெள்ளிக்கிழமைகளிலும் குத்து விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சுற்று வட்டார பழனி பாதயாத்திரை குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story