வென்னிமலை முருகன் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வென்னிமலை முருகன் கோவிலில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடந்தது.
தென்காசி
பாவூர்சத்திரம்:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வென்னிமலை முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும், நடைபெற்றது. இதில் சுற்று பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 11 மணிக்கு சிறப்பு பூஜையும், அதனைத் தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் வட்டார அரிசி ஆலை அதிபர்கள், நெல் அரிசி வியாபாரிகள், தவிடு வியாபாரிகள் செய்திருந்தனர். அன்னதானம் மாலை 4 மணி வரை நடைபெற்றது.
Related Tags :
Next Story