முத்தாரம்மனுக்கு 1,008 லட்டு அலங்காரம்


முத்தாரம்மனுக்கு 1,008 லட்டு அலங்காரம்
x

முத்தாரம்மனுக்கு 1,008 லட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளம் முத்தாரம்மன் சமேத குருசுவாமி கோவிலில் முளைப்பாரி திருவிழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலையில் முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சியும், அம்பாளுக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.

நேற்று முளைப்பாரி விழா நடந்தது. காலை 9 மணிக்கு அம்பாளுக்கு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு பெண்கள் முளைப்பாரியுடன் ஊர்சுற்றி வரும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு அம்பாளுக்கு 1,008 லட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை, 9 மணிக்கு அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது.

இதில் தருமை ஆதீனம் தென் மண்டல கட்டளை ஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், நிர்வாகிகள் சிவ.மகாலிங்கம், லட்சுமணன் மற்றும் விழா குழுவினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story