பிளஸ்-2 கணிதத்தோ்வினை 10,395 பேர் எழுதினர்


பிளஸ்-2 கணிதத்தோ்வினை 10,395 பேர் எழுதினர்
x

பிளஸ்-2 கணிதத்தோ்வினை 10,395 பேர் எழுதினர். 184 பேர் தேர்வு எழுதவரவில்லை.

விருதுநகர்


பிளஸ்-2 கணிதத்தோ்வினை 10,395 பேர் எழுதினர். 184 பேர் தேர்வு எழுதவரவில்லை.

பிளஸ்-2 தேர்வு

மாவட்டத்தில் நேற்று 100 மையங்களில் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் 9,511 மாணவர்களும், 11,151 மாணவிகளும் ஆக மொத்தம் 20,662 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 9,048 மாணவர்களும், 10,769 மாணவிகளும் ஆக மொத்தம் 19,817 பேர் தேர்வு எழுதினர்.

463 மாணவர்களும், 382 மாணவிகளும் ஆக மொத்தம் 845 பேர் தேர்வு எழுத வரவில்லை. பாடவாரியாக தேர்வு எழுதியவர்கள் விவரம் வருமாறு:-

கணிதத்தேர்வினை 5,045 மாணவர்களும், 5,534 மாணவிகளும் ஆக மொத்தம் 10,579 பேர் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 4,961 மாணவர்களும், 5,434 மாணவிகளும் ஆக மொத்தம் 10,395 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். 84 மாணவர்களும், 100 மாணவிகளும் ஆக மொத்தம் 184 பேர் தேர்வு எழுத வரவில்லை. விலங்கியல் தேர்வினை 665 மாணவர்களும், 1,646 மாணவிகளும் ஆக மொத்தம் 2,311 பேர் தேர்வுஎழுத வேண்டிய நிலையில் 589 மாணவர்களும் 1,575 மாணவிகளும் ஆக மொத்தம் 2,164 பேர் தேர்வு எழுதினர். 76 மாணவர்களும், 71 மாணவிகளும் ஆக மொத்தம் 147 பேர் தேர்வு எழுத வரவில்லை.

ஆடை வடிவமைப்பு

வணிகவியல் தேர்வினை 3,546 மாணவர்களும், 3,721 மாணவிகளும் ஆக மொத்தம் 7,267 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 3,284 மாணவர்களும், 3,535 மாணவிகளும் ஆக மொத்தம் 6,819 பேர் தேர்வு எழுதினர். இதில் 262 மாணவர்களும், 186 மாணவிகளும் ஆக மொத்தம் 448 பேர் தேர்வு எழுத வரவில்லை. டெக்ஸ்டைல் மற்றும் ஆடை வடிவமைப்பு பாடப்பிரிவில் 103 மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 88 மாணவிகள் தேர்வு எழுதினர். 15 பேர் வரவில்லை. விவசாய பாடப்பிரிவில் 255 மாணவர்களும், 121 மாணவிகளும் ஆக மொத்தம் 376 பேர் எழுத வேண்டிய நிலையில் 214 மாணவர்களும், 111 மாணவிகளும் ஆக மொத்தம் 325 பேர் எழுதினார். இதில் 41 மாணவர்களும், 10 மாணவிகளும் ஆக மொத்தம் 51 தேர்வு எழுத வரவில்லை.

நர்சிங் பாடப்பிரிவில் 26 மாணவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலையில் 26 பேரும் தேர்வு எழுதினர். மேற்கண்ட தகவலை மாவட்ட பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story