105 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


105 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x

தேங்காப்பட்டணம் அருகே 105 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி

புதுக்கடை,

கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள் தேங்காப்பட்டணம் அருகே உள்ள அம்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஸ்கூட்டரை தடுத்து நிறுத்தினர். உடனே, ஸ்கூட்டரை சாலையோரமாக நிறுத்தி விட்டு அந்த நபர் தப்பியோடி விட்டார். அதைதொடர்ந்து ஸ்கூட்டரை சோதனை செய்தபோது, அதில் பிளாஸ்டிக் கேன்களில் 105 லிட்டர் மண்எண்ணெய் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து வள்ளவிளையில் உள்ள அரசு குடோனிலும், ஸ்கூட்டரை கிள்ளியூர் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.


Next Story