தொலைந்து போன 105 செல்போன்கள் மீட்பு


தொலைந்து போன 105 செல்போன்கள் மீட்பு
x

தொலைந்து போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டது

மதுரை

மதுரை

மதுரை நகரில் வெவ்வேறு இடங்களில் தொலைந்து போன செல்போன்கள் குறித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் தொலைந்து போன செல்போன்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் 3, திடீர்நகர் சரகத்தில் 23, திலகர் ்திடலில் 4, மீனாட்சி அம்மன் கோவில் 6, தல்லாகுளம் 45, செல்லூர் 2, அண்ணாநகர் 20, திருப்பரங்குன்றம் 2 என மொத்தம் 105 செல்போன்கள் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு செல்போனை தொலைத்த உரிமையாளர்களிடம் வழங்கினார்.


Related Tags :
Next Story