107 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


107 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

107 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர்

கரூர் வாங்கல் பகுதியில் உள்ள கடைகளில் சிலர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக வாங்கல் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரிய வடுகப்பட்டி சாவித்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்ததில் அங்கு விற்பனைக்காக சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள 107 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பி ஓடிய கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காசு கடை தெருவை சேர்ந்த முருகன்(வயது 44) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story