மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்


மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
x

சின்னசேலம் மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்.

சின்னசேலம் அருந்ததியர் நகரில் மாரியம்மன் மற்றும் மதுரைவீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் 108 பால்குடத்தை தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story