108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு 'குவா, குவா'


108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு குவா, குவா
x

திருவண்ணாமலை அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது

திருவண்ணாமலை

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி, ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி மீனா. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக மேல்மலையனூர் கிராமத்தில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் மீனாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருவண்ணாமலை அருகே மங்கலம்புதூர் கிராமத்தின் அருகே வந்தபோது மீனாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதனையடுத்து டிரைவர் தினகரன், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர் பவதாரணி மற்றும் மேல்மலையனூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மேரிகரோலின் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தனர்.

இதில் மீனாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு குழந்தையையும், தாயையும் 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டு சேர்க்கப்பட்டனர்.

துரிதமாக செயல்பட்டு குழந்தையின் உயிரையும் தாயின் உயிரையும் காப்பாற்றிய தினகரன், பவதாரணி, மேரிகரோலின் ஆகியோருக்கு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story