108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்காணல்


108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்காணல்
x

அடுக்கம்பாறையில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு நேர்காணல் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கான நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் 19 வயது முதல் 30 வயதிற்கு மிகாமல் உள்ள ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணி நேர்காணலுக்கு 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் கண்ணன் தலைமையில் முதலில் எழுத்து தேர்வும், 2-ம் கட்டமாக நேர்முக தேர்வும் நடத்தப்பட்டது. இதில் தகுதியின் அடிப்படையில் டிரைவர் பணிக்கு 11 பேரும், மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.


Next Story