தான்தோன்றியப்பர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை


தான்தோன்றியப்பர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 6 May 2023 12:30 AM IST (Updated: 6 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மேலகுலவணிகர்புரம் தான்தோன்றியப்பர் கோவிலில்108 திருவிளக்கு பூஜை நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மேலகுலவணிகர்புரம் தான்தோன்றியப்பர் - சிவகாமி அம்பாள் கோவிலில் நேற்று சித்ரா பவுர்ணமியையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ர ஹோமம் மற்றும் வருண பகவானுக்கு சிறப்பு யாக வேள்வியும் நடந்தது. காலை 10 மணிக்கு சுவாமி-அம்பாள், யோக தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story