1098 எண் வடிவத்தில் அமர்ந்து அரசு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு


1098 எண் வடிவத்தில் அமர்ந்து அரசு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு
x

குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தொலைபேசி எண்ணை போன்று 1098 வடிவத்தில் அமர்ந்து அரசு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாகப்பட்டினம்

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ெரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஆஸ்லிபால், சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளியை சேர்ந்த மாணவிகள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் இலவச தொலைபேசி எண்ணான 1098 என்ற வடிவத்தில் அமர்ந்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story