10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நெல்லை அருகே 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள வெள்ளாளன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் கொம்பதாஸ் (வயது 14). இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சீதபற்பநல்லூர் போலீசார், கொம்பதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story