தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

நாகப்பட்டினம்

திருக்குவளை அருகே 14 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் மாணவியை அவரது உறவினர்கள் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று இரவு வீட்டின் பின்புறம் நைலான் கயிற்றில் மாணவி தூக்கில் தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த திருக்குவளை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story