10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
திருச்சி

திருச்சி அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே போலீசுக்கு தெரியாமல் உடல் தகனம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

10-ம் வகுப்பு மாணவி

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து கூட்டுறவு நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகள் வைஷ்ணவி (வயது 15). இவர் சோமரசம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வயிற்றுவலியால் நீண்ட நாட்களாக அவதி அடைந்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வயிற்று வலி அதிகமாக இருந்ததால் மாணவி வைஷ்ணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையே தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்பட்டதால் வைஷ்ணவி வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசுக்கு தெரியாமல் உடல் தகனம்

இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதால் ஊரில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்து பேசி போலீசாருக்கு தெரியாமல் இரவு 8 மணி அளவில் மாணவியின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தகனம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மல்லியம்பத்து கிராம நிர்வாக அலுவலர் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story